சீனாவில் தொழில் தொடங்க வருமாறு, இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கேகியாங் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில்
கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த சீனா விரும்புவதாக கூறிய லீ கேகியாங், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சீன சந்தைகளை திறந்துவிட தயாராக இருப்பதாக அவர் கூறினார். எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இரு நாட்டு மக்களுக்கு இடையே உறவை மேம்படுத்த இரு நாட்டு அரசுகளும் முன் முயற்சி எடுத்துள்ளதாக கூறினார். மேலும் இரு நாட்டு பண்பாட்டு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக குர்ஷித் அதன் அடிப்படையில் இந்தியப் பள்ளிகளில் சீன மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.