உலகின் சிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில், ஒரு இந்தியப் பல்கலைக்கழகம்
கூட இடம்பெறாதது வேதனைக்குரியது. எனவே, குறைந்தபட்சம் ஒரு இந்திய
பல்கலையாவது, மேம்பட்ட
ஆராய்ச்சிக்காக முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரிலுள்ள லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகத்தின்
3வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஜனாதிபதி இதைக் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது: 40 ஆயிரம் மாணவர்களை கையாளும் வகையில் சிறப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்திய எல்.பி.யூ., பல்கலையை, கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். மேலும், கல்வியால், இளைஞர்களின் மனதை மாற்ற முடியும்.
ஒரு சமூகம் பெண்களை மதிக்கவில்லை என்றால், அது முன்னேற முடியாது என்பதை சிந்திக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1 கோடியே 20 லட்சம் இந்தியர்கள், உலகின் பணியாளர் எண்ணிக்கையில் புதிதாக இணைகிறார்கள். வரும் 2020ம் ஆண்டில், உலகப் பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், இந்தியாவில் இருப்பார்கள். உற்பத்தி வளம் என்பது, உண்மையிலேயே ஒரு சிறந்த வளமாகும். பணிக்குத் தேவையான திறன்களை நாம் வழங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் மிகுந்த சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் ஒரு காலத்தில் செயல்பட்ட, உலகின் பழமையான பல்கலைக்கழகங்களான, நாளந்தா மற்றும் தட்சசீலா போன்றவை, உலகெங்கிலும் இருந்து, மாணவர்களை ஈர்த்தன. இந்தப் பல்கலைக்கழகங்கள், 1000 ஆண்டுகளுக்கும் மேலாக, மாணவர்களுக்கு, கல்விச் சேவை புரிந்தன. ஆனால் தற்போதைய நிலையில், உலகின் சிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில், ஒரு இந்தியப் பல்கலைக்கழகம் கூட இடம்பெறாதது வேதனைக்குரியது.
ஒரிஜினல் ஆராய்ச்சித் துறையில் நோபல் பரிசுபெற நாம் 83 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. நோபல் பரிசுபெற்ற சில பிரபலங்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்கள் பணிபுரிவது வெளிநாட்டுப் பல்கலைகளில். குறைந்தபட்சம், ஒரு இந்தியப் பல்கலைக்கழகமாவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் சிறப்பாக செயலாற்ற முன்வர வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை உள்ளது என்பதை நான் அறிவேன். அதேசமயம், e - class room மற்றும் சிறந்த பேராசிரியர்களை பரிமாறிக் கொள்ளல்(exchange programme) போன்ற வசதிகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தாக்க சிந்தனைகள், இந்த நேரத்திற்கு தேவையான ஒன்று என்று பலவிதமான கருத்துக்களைப் பேசிய அவர், மாணவர்களின் உள்ளத்தில், கொள்கை மற்றும் மேன்மைக்கான ஒளி ஏற்றப்பட வேண்டும் என்றும் தனது ஆவலை வெளிப்படுத்தினார்.