தீவிர கட்டுப்பாடு: தனியார் பள்ளி வாகனங்கள் 1-ந்தேதி முதல் ‘ஸ்டிரைக்’

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா? தகுதி சான்று பெறப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட அளவு இருக்கைகள், கதவு, அவரச வழி போன்றவை விதிமுறைகள் படி உள்ளதா? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து விதிமுறைகளின் படி இல்லாத பள்ளி வாகனங்கள் இயக்க தடை செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. குறைகளை சரி செய்த பிறகுதான் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகள் வாகனங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளன.

பள்ளி வாகனங்களை இயக்குவதில் காட்டப்படும் தீவிர கெடுபிடியை கண்டித்து வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவது இல்லை என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் கூறியதாவது:-

தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் மிகுந்த கெடுபிடி செய்கிறார்கள். வாகன தணிக்கை என்ற பெயரில் பல்வேறு விதி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

வாகனங்களில் வழக்கமான கதவு மட்டுமின்றி மேலும் ஒரு கதவு அமைக்கப்பட வேண்டும் என்று கூறுவதால் வாகனத்தின் உறுதி தன்மை குறைகிறது. இதனால் இருக்கைகள் கூடுதலாக போட முடியாது.

ஏற்கனவே கல்வி கட்டணம் நிர்ணய குழு முடிவு செய்துள்ள கட்டணப்படி பள்ளியை நடத்துவதே சிரமமாக உள்ளது. இதில் வாகனங்களிலும் மாணவர்களை ஏற்றிச் செல்வதில் பல கட்டுப்பாடுகளை விதிப்பதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

வாகனங்களுக்கான இன்சூரன்சு பிரிமியம் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி வாகனங்களை ஓட்ட முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜூலை 1-ந்தேதி முதல் பள்ளி வாகனங்களை ஓட்டுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக 28-ந்தேதி நடக்கும் சங்க கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களும் 1-ந்தேதி முதல் நிறுத்தப்படும்.

இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...