அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை அறிவிப்பு

பொள்ளாச்சியில் அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், ஊஞ்சவேலாம்பட்டி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில், மேல்கூரை பகுதியிலிருந்து மழைநீர் ஒழுகி வகுப்பரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை பள்ளியை திறந்த ஆசிரியர்கள் வகுப்பரையில் தண்ணீர் தேங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடன், பள்ளி மாணவர்களை அருகே உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில், தற்காலிகமாக அமர்த்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
அதுபோல், தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி ஏபிடிரோடு நகர்வழி நடுநிலை பள்ளியிலும் வகுப்பறை மற்றும் வளாக பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மாணவர்கள் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த தெற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குருராகவேந்திரா, பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
ஒன்றிய பள்ளிகளில் பராமரிப்பு சரியாக இல்லாததால் தண்ணீர் தேக்கமடைவதையடுத்து மாணவர்கள் படிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, கள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி மற்றும் ஏபிடிரோடு நகர்வழி நடுநிலை பள்ளிகளுக்கு இன்றும்(27ம் தேதி), நாளையும்(28ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக, கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் கண்ணபிரான் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...