அரசு பள்ளிகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கின

இந்த கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்புக்கு ஆங்கில வழி கல்விக்கென சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம்
20 மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளில் உடனடியாக ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பள்ளி களில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக வகுப்புக்கு வந்திருந்தனர். மேலப்பாளையம் ஆமீன்புரம் பள்ளி உள்ளிட்ட ஆங்கில வழி வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த பள்ளியில் ஏற்கனவே அங்கன்வாடி வகுப்புகள் செயல்பட்டு வந்த வகுப்பறை ஆங்கில வழி ஒன்றாம் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெற்றோர் ஆர்வமாக தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்க்க வந்திருந்தனர். சில பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு தனி வண்ணத்தில் சீருடை, பெல்ட், காலணி போன்றவை வழங்கப்படுமா என ஆவலுடன் விசாரித்தனர். ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது குறித்து கல்வித் துறையினர் கூறுகையில், ‘தற்போது 20 மாணவர்களுக்கு குறையா மல் சேர்ந்த பள்ளிகளில் ஆங்கிலப்பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளின் ஆங்கில வழி பயில மாணவர் சேர்க்கை தேவையான அளவு உயர்ந்ததும் உடனடியாக தொடங்கப்படும்’ என்றனர். ஆங்கில வழி கல்வி தொடங்கிய பல பள்ளிகளில் குறைந்தபட்ச வசதிகளே உள்ளன. சில பள்ளிகளில் தனி வகுப்பறை கூட ஒதுக்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். எனவே தனி வகுப்பறை, பிரத்யேக ஆசிரியர் நியமனம், பெற்றோர் எதிர்பார்ப்பது போல் தனி சீருடை, டை, பெல்ட், ஷு ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் இயங்கும் ஆங்கில வகுப்பும், ஆசிரியர்களும் தனித்தன்மையுடன் இருந்தால் மேலும் பல பெற்றோர் தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசுப் பள்ளிகளுக்கு திரும்பும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...