ஊராட்சி பள்ளிகளில் ஆங்கில போதனை ...துவக்கம்!

1029 மாணவர்கள் இணைந்ததால் சாதனை

நீலகிரி மாவட்டத்தில், 55 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி போதனை துவங்கப்பட்டுள்ளது; 1,029 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆங்கில வழி போதனையை துவக்க அரசு அறிவுறுத்தியது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

நடப்பாண்டு, அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில், கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். மாவட்டத்தில், மொத்தம் 281 ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன; இதில், தமிழ் வழிக்கல்வியில் 23 ஆயிரத்து 879 பேர் பயின்று வருகின்றனர். இதில், 1 மற்றும் 6ம் வகுப்புகளில், ஆங்கில வழி போதனையை துவக்கப் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டன.

""இதன்படி, கூடலூரில் 29, குன்னூரில் 4, கோத்தகிரியில் 3, ஊட்டியில் 19 என, 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கில வழி போதனை துவங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1,029 மாணவ, மாணவியர் ஆங்கில வழி கல்வியில் ஆர்வத்துடன் இணைந்து சாதனை புரிந்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் ஆங்கில வழியில் கல்வி போதிக்கப்படும்; அடுத்த ஆண்டுகளில் மேலும், சில பள்ளிகளில் ஆங்கில வழி போதனையை துவக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதில், ஆர்வமுள்ள ஊராட்சி பள்ளி நிர்வாகங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்,'' என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் லட்சுமணன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...