ஆங்கில வழி பள்ளிகளில் ஏழைமாணவர்களுக்கு ஒதுக்கீடு: அதிகாரிகள் குழு ஆய்வு

ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு "நுழைவு நிலை' வகுப்புகளில் 25 சதவீத அட்மிஷன் வழங்கப்படுகிறதா? என, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையிலான குழு
நேற்று ஆய்வை துவங்கினர்.

சிறுபான்மையற்ற மழலையர், துவக்க நிலை, மெட்ரிக், சுயநிதி பள்ளிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பு சேர்க்கையில் 25 சதவீதம் ஒதுக்க வேண்டும் என, 2009ல் கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கும் மாணவரின் வீட்டுக்கும் ஒரு கி.மீ., தூரம்,ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்குள் இருத்தல் உள்ளிட்ட தகுதி வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி அட்மிஷன் வழங்க உத்தரவு உள்ளது. இந்த 25 சதவீத ஒதுக்கீட்டை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்ற புகார் தொடர்ந்தது. இந்நிலையில்,மெட்ரிக்.,பள்ளி இயக்குனரக உத்தரவின் பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வை யாளர், 2 ஆசிரியர் பயிற்றுநர் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு நேற்று முதல் அந்தந்த மாவட்டத்தில் ஆய்வை துவங்கினர். ஜூலை 20 வரை ஆய்வு நடக்கும். ஆய்வுக்குழுவினர் கூறுகையில், ""25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் தகுதியான மாணவர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் நுழைவு நிலை வகுப்புகளில் அட்மிஷன் வழங்காத பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கிறோம். தவறு செய்த பள்ளிகள் குறித்த அறிக்கை மெட்ரிக்., பள்ளி இயக்குனருக்கு அனுப்பி,உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்,என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...