"இக்னோ' பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான, "இக்னோ'வில் வழங்கப்படும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து,
"இக்னோ' சென்னை மண்டல இயக்குனர் அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பல்கலையில் வழங்கப்படும் பொருளாதாரம், சமூகவியல், பொது நிர்வாகம், அரசியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.
விண்ணப்பங்களை, "ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், 407, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35' என்ற முகவரியில் உள்ள, சென்னை மண்டல அலுவலகத்திலும், வேளச்சேரி குருநானக், திருநின்றவூர் ஜெயா கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிகளில் உள்ள பயிற்சி மையங்களில் பெறலாம்.விண்ணப்ப விலை, 200 ரூபாய்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அபாரத தொகை, 500 ரூபாயுடன், ஜூலை, 31ம் தேதி வரையும் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-2431 2766, 2431 2979 என்ற எண்களிலும், ணூஞிஞிடஞுணணச்டி÷டிஞ்ணணித.ச்ஞி.டிண என்ற இ-மெயில் முகவரியிலும் தகவல்களை பெறலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...