ஆந்திர மாநிலத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக 1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு
பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
 
மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
அடுத்த கட்டமாக20 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளிகள் துல்லியமாக5679 பள்ளிகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
நமது எதிர்பார்ப்பு

ஆந்திரா முன்னுதாரணம் காண்பித்து விட்டது. நம்முடைய இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களைப் பற்றியோ கல்வி உயர் அலுவலர்களைப் பற்றியோ இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றியோ யாரும் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

ஆந்திராவில் இருந்து ஏபிஎல்லை பிடித்துக் கொண்டு வந்தவர்களுக்கு இதனையும் கொண்டு வர வெகு நேரம் ஆகாது. ஆசிரியர் சங்கங்கள் இணைந்து போராடினால் மட்டுமே இதனை தமிழகத்தில் தவிர்க்க முடியும்.அனைத்து சங்கங்களும் இனைவார்களா?
சக்திமைந்தன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...