தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 ஆசிரியர் பணியிடம் கவுன்சலிங் மூலம் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 100 தலைமைஆசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை கவுன்சலிங் மூலம் நிரப்பப்படவுள்ளனர்.2013-14ம் கல்வியாண்டில் 100 அரசு
உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணயிடங்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்பட்டது. 9 பாடப்பிரிவுகளுக்கு தலா ஓர் ஆசிரியர் வீதம் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களை கவுன்சலிங் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள னர். இதற்கான கவுன்சலிங் இன்று நடக்கிறது. பிற்பகல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. தொடர்ந்து ஜூலை 20ம் தேதி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மாறுதல்) கவுன்சலிங்கும், 22ம் தேதி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டம் விட்டு மாவட் டம்) கவுன்சலிங்கும் நடக்க உள்ளது. கவுன்சலிங் அனைத்தும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடக்க உள்ளன.வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மாறுதல் கோரும் முதுநிலை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் வழியாக ஜூலை 19ம் தேதி மாலை 5 மணி வரை அளிக்கலாம். 2013-14ம் கல்வியாண்டிற்கு மே மாதம் நடந்த கவுன்சலிங் கில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கலாம். இருபாலர் பள்ளிகளில் இருபாலர் ஆசிரியர்களையும் நியமிக்கலாம்.இவ்வாறு வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...