ஜூலை-31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை


மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாகக்

கொண்டாடப்படும். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில், அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதை, ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10-ம் தேதி 2-வது சனிக்கிழமை, பணி நாளாக

செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...