நாளை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 6,225 பேர் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெறும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 6,225 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,800 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தேர்வில், கடலூர் மாவட்டத்தில் 6,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, முட்லூர் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களில் மொத்தம் 15 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திற்கும் தலைமைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 350 பேர் மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுதும் பணிக்கு 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை

வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...