கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர், நூலகர் பணி

கேந்திய வித்யாலயா சங்கதன்(கே.வி.எஸ்) என்பது இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். கே.வி.எஸ் பள்ளிகளில் நாடு முழுவதும் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்(Post Graduate Teacher(PGT) (GROUP B POST)காலியிடங்கள் விவரம்: ஆங்கிலம் - 85, இந்தி - 69, இயற்பியல் - 85, வேதியியல் - 82, கணிதம் - 91, உயிரியல் - 75, வரலாறு - 34, புவியியல் - 39, பொருளாதாரம் - 56, வணிகவியல் - 94, கணினி அறிவியல் - 80, பயோடெக்னாலஜி - 03. ஆக மொத்தம் 793 இடங்கள்.சம்பளம்: 9300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4800வயதுவரம்பு: 28.08.2013 அன்று உள்ளப்படி 40-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: உரிய பாடங்களில் முதுநிலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.குறிப்பு: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிவழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.ட்ரெயிண்ட் கிராஜூவேட் டீச்சர்ஸ் (TRAINED GRAGUATE TEACHER (TGT) (GROUP B POST)காலியிடங்கள்: ஆங்கிலம் - 86, இந்தி - 130, அறிவியல் - 105, சமஸ்கிருதம் - 38, கணிதம் - 112, சோஷியல் ஸ்டடீஸ் - 168. ஆக மொத்தம் 639 இடங்கள்.சம்பளம்: ரூ. 9,300 - 34,800+ கிரேடு சம்பளம் ரூ. 4,600.வயதுவரம்பு: 28.08.2013 அன்று உள்ளப்படி 35-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: உரிய பாடங்களில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.குறிப்பு: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிவழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.ப்ரைமரி டீச்சர்பணிக்கோடு எண்: 51மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 1979.சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4200.வயதுவரம்பு: 28.08.2013 அன்று உள்ளப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சீனியர் செகண்டரி ஸ்கூல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுப் பயிற்சிக்குக் குறையாத ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிவழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.மியூசிக் டீச்சர்பணிக்கோடு எண்: 52மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 100.சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4200.வயதுவரம்பு: 28.08.2013 அன்று உள்ளப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: அங்ரீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இசையில் பெற்ற இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான இசைப் படிப்புப் பட்டம் அல்லது இதர தகுதி பெற்றிருக்க வேண்டும்.லைப்ரரியன் பணி:மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 112.பணிக்கோடு எண்: 50சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4600.வயதுவரம்பு: 28.08.2013 அன்று உள்ளப்படி 35-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: நூலக அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டத்துடன் நூலக அறிவியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிவழிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்புத் தளர்வு சலுகைகள்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்களுக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், பெண்களுக்கு 10 ஆண்டுகளும்(ஆசிரியர் பணிக்கு மட்டும்), உயர்ந்தபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://jobapply.in/kvs/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2013ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 12.09.2013மேலும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...