மருத்துவம் சார் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, வரும், 13ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது. எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), எம்.பில்., (மருத்துவ
சமூக பணி), எம்.எஸ்சி., (மூலக்கூறு ஆய்வியல்) ஆகிய, மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணைய தளங்களில், பதிவிறக்கம் செய்து, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, விண்ணப்ப கட்டணம், உள்ளிட்ட விவரங்களையும், குறிப்பிட்ட இணைய தளங்களில் பெறலாம். சுகாதாரத் துறை இணைய தளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.