நம்மால் எதையும் சாதிக்க முடியும்: ஐ.ஐ.டி., சிறுவர் சத்யம் குமார் அட்வைஸ்

""நம்மால் எதையும் சாதிக்க முடியும்; தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது,'' என, ஐ.ஐ.டி., ரேங்க் பெற்ற, பீகாரை சேர்ந்த, சத்யம்குமார் பேசினார்.
பீகார் மாநிலம்,கோரக்பூரை சேர்ந்தவர் சத்யம்குமார். விவசாய
குடும்பத்தை சேர்ந்த இவர், தன், 12வது வயதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதி, 85 சதவீத மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றார். தன், 13வயதில், ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு எழுதி, தேசிய அளவில், 697 வது இடம் பெற்றார். ஐ.ஐ.டி., தேர்வில் சிறப்பிடம் பெற நினைக்கும் இவர், மீண்டும் தேர்வு எழுத திட்டமிட்டு, ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள ஐ.ஐ.டி., பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

தேனி, வேலம்மாள் பள்ளி மாணவர்களிடையே, நேற்று, அவர் பேசியதாவது: நம்மால் முடியாது என, எதையும் விட்டு விடக்கூடாது. நாம் சாதிக்க பிறந்தவர்கள்; எல்லாவற்றையும் நம்மால் சாதிக்க முடியும். தோல்வியால் துவண்டு விடக்கூடாது; தோல்வி, வெற்றியின் அடிப்படைதான். ஐ.ஐ.டி., படித்தால், எல்லா துறைகளிலும் வெற்றி பெற முடியும். ஐ.பி.எஸ்., உட்பட, சிவில் சர்வீஸ் தேர்வுகளில், எளிதில் சாதிக்க முடியும். ஐ.ஐ.டி., படித்தவர்களுக்கு, உலகில், வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. எனக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் சாதிக்க விருப்பம். இத்துறையில், நான் நிச்சயம் சாதிப்பேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாதித்தது போல் எனக்கும், ஆசை உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...