குழந்தை தத்தெடுப்பை நெறிப்படுத்தும் மையம்: காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சமூக நலத்துறை அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழந்தை தத்தெடுப்பை நெறிப்படுத்தும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து அரசு:–தத்தெடுப்பை நெறிப்படுத்தும் மையம்சமூகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்கிட ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மாநில குழந்தை பாதுகாப்புச்சங்கம் ஒன்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக நல கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக சமூக நல இயக்கத்தின் மாநில தத்து வள ஆதார மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் உள்நாட்டு தத்தெடுத்தல், வெளிநாட்டு தத்தெடுத்தல் நெறிமுறைப்படுத்தப்படுகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர், திட்ட அதிகாரி, கணக்காளர், திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான பதவிக்கு தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்www.tn.gov.in என்ற இணையதளத்தில் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை) விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டு உள்ளது. 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் மற்றும் பயோ–டேட்டாவுடன் ஆகஸ்டு 28–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை, சமூக நல இயக்குனர், சமூக நல இயக்ககம், எண்: 58, அருணாச்சலம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை–2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...