ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதும்; மதிய உணவை கண்காணிக்க தேவையில்லை : கோர்ட் அதிரடி

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமை பாடம் சொல்லி தருவது மட்டும் தான்; மதிய உணவு சமைக்கும் முறையை அவர்கள் கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் ஐகோர்ட்
தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது.

ஐகோர்ட் விளக்கம் :

ரசாயன பொருள் கலந்த விஷத்தன்மை உள்ள உணவை சாப்பிட்டு பீகாரில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்த விவகாரத்தின் எதிரொலியாக உத்திர பிரதேசத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த பிரதானச்சாரியா பரிஷித் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவது மட்டுமே; மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரித்த‌லை கண்காணிப்பது அல்ல என தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த அதிருப்தி அடைந்துள்ளது தேவையற்றது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
மனுவில் கோரிக்கை :



பிரதானச்சாரியா பரிஷித் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு சாரா அமைப்புக்கள் பள்ளிகளில் மதிய உணவை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது எனவும், இதனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களின் தனிப்பட்ட நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் மதிய உணவு தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் புதிய கடமைகள் குறித்தும், மதிய உணவு திட்டத்தில் அரசு சாரா அமைப்புக்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் கோர்ட் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது.

நீதிபதிகள் உத்தரவு :

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; மதிய உணவு தயாரித்தல் போன்ற முக்கிய பணிகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அரசு தான் தீர்மானிக்க வேண்டும்; மதிய உணவ திட்டத்தின் கொள்கைகள் குறித்து அரசு விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்; இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும்; அன்றைய தினம் அரசு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; மறு உத்தரவு வரும் வகையில் மதிய உணவு தயாரிக்கும் பொறுப்பை அரசு சாரா அமைப்புக்களை மேற்கொள்ளும். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பீகார் அரசு தெரிவித்துள்ளது. எவ்வாறு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து வழிகாட்ட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டை பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...