வாக்குறுதிகள் எல்லாம் ஓட்டு வாங்குவதற்கு முன்புமட்டும்தான் போலும் .............

தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் என்ற வரிசையில் தற்போது அரசு ஊழியர்களையும் திமுக அரசு போராடும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் அளித்துவிட்டதாக திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. எனினும், இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதே போன்று, ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியதாக திமுக அரசு அறிவித்தாலும், மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இதுவரை கண்டிராத அளவுக்கு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல், காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும்போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை அடியோடு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு வேடிக்கை பார்த்தது. மேலும், கோரிக்கை மனுவினை அளிக்க வந்த அரசு ஊழியர்களை காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதியின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்துவிட்டு, அதில் பல முரண்பாடுகளை உருவாக்கியவர்தான் கருணாநிதி. பின்னர் 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டன.
மேலும், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 சதவீத தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12,000 இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும் வகை செய்யப்பட்டது.
2000க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும், கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்த வரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் பதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதை திமுக அரசு புறக்கணித்தால், விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...