பள்ளி டிசியுடன் சேர்த்து மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமைஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

பள்ளியை விட்டு செல்லும்போது, மாற்றுச்சான்றிதழுடன் (டிசி), மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை எச்சரித்துள்ளது.எஸ்எஸ்ஏ மூலம் அரசு மற்றும் உதவி
பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் கற்றல் குறைபாடு உள்ளவர்கள்கண்டறியப்பட உள்ளனர். இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மதிப்பீடு தேர்வு நடக்க உள்ளது. தவிர கடந்தவகுப்புகளில் மாணவர்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் திறள் பதிவேட்டை எஸ்எஸ்ஏ அலுவலகம் கேட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளின் திரள் பதிவேடு மட்டுமே எஸ்எஸ்ஏ அலுவலகங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளன. ஆனால் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் புதிதாகசேர்ந்த மாணவர்களின் திரள் பதிவேடு அனுப்பப்படவில்லை. ஏற்கனவே அவர்கள் படித்த பள்ளிகளில் இருந்து வெறும் மாற்றுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், திரள் பதிவேடு வழங்க முடியவில்லை என தலைமை ஆசிரியர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.திரள் பதிவேடு இல்லாவிட்டால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கணக்கிட முடியாது. இதற்காகத்தான் தொடர் மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் திரள் பதிவேடு தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: ஏற்கனவே தங்கள் பள்ளியை விட்டுச் சென்ற 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக திரள்பதிவேடு வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் பள்ளியை விட்டு செல்லும்போது மாற்றுச்சான்றிதழுடன், மாணவர்களின் திரள் பதிவேட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். மாணவர்களின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...