எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?

"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஜூலை, மூன்றாம் வாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என, மருத்துவக் கல்வி, மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார்
கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின், அரசு ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அதிகரிக்கப்பட்டுள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள், திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இக்கலந்தாய்வை, ஜூலை, மூன்றாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி, மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் கூறியதாவது: இரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 185 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலை எதிர்பார்த்துள்ளோம். வரும், 10ம் தேதிக்குள், இந்த ஒப்புதலை பெற, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், ஜூலை, மூன்றாம் வாரம், கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுகுமார் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...