காரமடை தோலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, "குடி'மகன்களின்
"பார்' ஆக மாறியுள்ளது. பள்ளியின் பீரோவை
உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள், சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், ஒரே வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. துவக்கப்பள்ளியில் 85 குழந்தைகளும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 160 மாணவர்களும் படிக்கின்றனர். பள்ளிக்கு பெயரளவில் சுற்றுச்சுவர் உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்றால், குடிமகன்களுக்கு கொண்டாட்டம்; ஆனால், ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம். நேற்று முன் தினம் இரவு, குடிமகன்கள், இரு வகுப்பு அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மது குடித்துள்ளனர். பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு, பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். எந்தப்பொருளும் இல்லாததால், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பு அறை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். முடியாததால், ஜன்னல் வழியாக, பெஞ்ச் மேல் வைத்திருந்த 15 வகையான விளையாட்டு பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாலை பள்ளி நேரம் முடிந்ததும், சில சமூக விரோதிகள் சுவர் ஏறிக்குதித்து, மதுக்குடித்தும், சீட்டு விளையாடியும் வருகின்றனர். கழிப்பிடத்தை யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திறந்தவெளி "பார்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வாந்தி எடுத்து அசுத்தம் செய்கின்றனர். இன்று (நேற்று) பள்ளிக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த "ஏ.பி.எல்., அட்டைகள் அனைத்தும் சிதறிகிடந்தன. ஒரு வகுப்பு அறையில் மதுபாட்டில்கள் கிடந்தன. இதே நிலை தொடர்ந்தால், பள்ளியில் உள்ள கம்யூட்டர்களுக்கும், இதர பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயா, காரமடை போலீசில் புகார் செய்துள்ளார்.