தமிழ்வழிக்கல்வி தாய்ப்பாலுக்கு இணையானது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக விழாவில் அமைச்சர் வைத்திலிங்கம்


தமிழ்வழிக்கல்வி தாய்ப்பாலுக்கு இணையானது என்று தஞ்சையில் நடந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

பாராட்டு விழா

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் பதவி உயர்வு பெற்ற, பணி நிறைவு செய்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றோருக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் ஜெயராஜ், அமைப்பு செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றுப்பேசினார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற குணசேகரன், ராஜசேகர் ஆகியோரையும், பணி நிறைவு செய்த தலைமை ஆசிரியர்கள் 13 பேரையும், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 13 பேரையும் பாராட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

உலகளாவிய வேலை வாய்ப்பு பெற இன்று ஆங்கில கல்வி தேவை. ஆங்கிலத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்வழிக்கல்வி தாய்ப்பாலுக்கு இணையானது. தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து முதல்–அமைச்சரிடம் சரியான நேரத்தில் எடுத்துரைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீதம் தேர்ச்சி

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகரசபை தலைவி சாவித்திரிகோபால், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் சுவாமிநாதன், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன், முன்னாள் கிழக்கு மண்டல செயலாளர் முத்துமாணிக்கம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கரம்பயம் பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், மருங்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, ஒரத்தநாடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகியோருக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...