அண்ணாமலைப் பல்கலையில், பொறியியல் பிரிவுக்கு, மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வில், 600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலையில், கலந்தாய்வு
நடந்து வருகிறது. பொறியியல் பாடப் பிரிவில், மாணவர்கள் சேர்க்கை, நேற்று துவங்கியது. முதல் நாள், பொது பிரிவு கலந்தாய்வில், 600 பேர் பங்கேற்றனர். நுழைவுத் தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாணவர், நவீன், காட்டுமன்னார்கோவில் மாணவி அருணா, சென்னை, தி.நகர் மாணவர் சில்டன் பிரேசில் ஆகியோருக்கு, சேர்க்கை அனுமதி அட்டையை, நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா வழங்கினார். நுழைவுத் தேர்வு, மாணவர் கலந்தாய்வு என்பது, அண்ணாமலைப் பல்கலைக்கு புதிது என்பதால், பல்கலைக் கழக வளாகத்தில், தோரண வளைவுகள், பெரிய அளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர்களில், "புரோக்கர்கள் கூறுவதை, நம்ப வேண்டாம்' என, வாசகங்கள் இருந்தன.