பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு

பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு
2 ஊக்க ஊதியம் தமிழக அரசில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர் பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களின் உயர்கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு 2 ஊக்க ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. (இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியில் சேரும் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,060 ஆக இருக்கும். அதேநேரத்தில், குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர், கணக்காளர் பணியில் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,000 தான்.

நேரடி உதவியாளர்களுக்கு பாதிப்பு நேரடியாக உதவியாளர், கணக்காளர் பதவியில் சேருவோரின் தரம் ஊதியம் ரூ.2800 ஆக இருந்தாலும் (இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு தர ஊதியம் ரூ.2400) இரண்டு ஊக்க ஊதியம் காரணமாக பட்டதாரி இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் அடிப்படை சம்பளம் 60 ரூபாய் அதிகமாக இருக்கும். குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தாலும் குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களுக்கு கீழ் பணிபுரியும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தங்களை காட்டிலும் அதிக சம்பளம் பெறுவது நேரடி உதவியாளர்களையும், கணக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அரசிடம் அவர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். ரூ.60 தனி ஊதியம் இந்த நிலையில், நேரடி உதவியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய 6–வது ஊதியக்குழு குறைபாடு நிவர்த்திக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நேரடி உதவியாளர்கள் மற்றும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் இடையே அடிப்படை ஊதிய வித்தியாசத்தை ஈடுகட்டும் வகையில் நேரடி உதவியாளர்களுக்கு ரூ.60 தனி ஊதியமாக வழங்கப்படும். இது 1.1.2006 முதல் கணக்கிடப்படும். எனினும் இதற்கான பணப்பயன் 1.4.2013 முதல் கணக்கிட்டு அளிக்கப்படும். திட்டம் ரத்து மேலும், பட்டம் பெற்றுள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு 2 ஊக்க ஊதியம் வழங்குவது வாபஸ் பெறப்படுகிறது. இந்த உத்தரவு அரசாணை வெளியான நாள் முதல் அமலுக்கு வருகிறது. எனினும் 1.4.2013 முதல் 22.7.2013 வரையிலான காலத்தில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு பட்டப் படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...