வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை
ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள்
தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில்
நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி.,
இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்,
விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44
பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை
குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி
செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர்,
பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று
வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று
வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக
பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.