ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேசிய கொடியை அவமதித்தாக கிராம மக்கள் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கொடியை அவமதித்ததாக அக் கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.

வத்திராயிருப்பு ஒன்றியம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை வழிபாட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் சூரிய மறைவுக்குள் கொடி இறக்கப்படவேண்டும் என்பது மரபு. ஆனால் இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணி வரை தேசிய கொடி இறக்கப்படாமல் இருந்துள்ளது. இச் செயல் தேசிய கொடியை அவமரியாதை செய்த செயலாகும் என்று கிராம மக்கள் கூறி, இது குறித்து கிராம மக்கள் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து நாம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் இது தொடர்பாக கேட்பதாக கூறினார்.தேசிய கொடிக்கான மரியாதையை கிராம மக்கள் கூட தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருக்கும் அதேவேளையில், ஆசிரியர்கள் தேசிய கொடியை அவமரியாதை செய்தமைக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...