மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களுக்கு ஊர் பொது மக்கள் ஒன்று திரண்டு தர்ம அடி

செஞ்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களுக்கு ஊர் பொது மக்கள் ஒன்று திரண்டு தர்ம அடி கொடுத்தனர்.

செஞ்சி வட்டம் அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளையாம்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காணை வட்டார வளமையத்தில் இருந்து வட்டார வளமைய ஆசிரியர்கள் சாலையகரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜேஷ்(37) மற்றும் அய்யன்கோயில் பட்டு கலியபெருமாள் மகன் திருநாவுக்கரசு(32), திருவக்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் கல்வி திறனறிவு சோதனை வியாழன் அன்று மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் 8-ம் வகுப்பு மாணவிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 6 மாணவிகள் நன்றாக படிக்கவில்லை என்று கூறி அம்மாணவிகளிடம் தனியாக ஆய்வு செய்வதாக குழந்தைகள் என்று கூடபாராமல் ஆசிரியர் ராஜேஷ் என்பவர் பாலியல் கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தன் பெற்றோரிடம் ஆசிரியர் என்னிடம் தவறான முறையில் நடந்ததாக கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றம் ஊர் பொது மக்கள் ஒன்று கூடி பள்ளிக்கு சென்று 3 ஆசிரியர்களை தாக்க முயன்றனர். இதில் கோபாலகிருஷ்ணன் தப்பி ஓடி விட்டார். பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ராஜேஷ்க்கு பொது மக்கள் தர்ம அடி அடித்தனர். இதில் உடன் வந்த ஆசிரியர் திருநாவுக்கரசையும் பொது மக்கள் கடுமையாக தாக்கினர்.

தகவல் அறிந்ததும் அனந்தபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து பொது மக்களிடம் இருந்து 2 ஆசிரியர்களையும் மீட்டு அன்ந்தபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இது குறித்து விழுப்புரம் எஸ்பி.மனோகரன் அனந்தபுரம் காவல் நிலையத்தில் உள்ள ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...