அரசு முத்திரையுடன் கேட்பாரற்று கிடந்த சான்றிதழ்கள்: தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்காத அவலம்

ராஜபாளையம்: 2005ல் தொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு வழங்க வேண்டிய, அரசு முத்திரையுடன் கூடிய தொழில் திறன் பயிற்சி சான்றிதழ்கள், ராஜபாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், கேட்பாரற்று கிடந்தன.

ஊரக வளர்ச்சி துறையின் கீழ், கிராம பெண்கள் முன்னேற்றத்திற்கு, 2005ல், தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. ரெடிமேட் ஆடை தயாரிப்பு போன்ற பயிற்சிகள், அதே ஆண்டு, ஜூலை 15 முதல் 22 வரை நடந்து உள்ளது. இதற்கான சான்றிதழ்கள், சம்பந்தப்பட்டவர்களில் பலருக்கு, வழங்கப்பட வில்லை. தற்போது இந்த சான்றிதழ்கள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், சிதறி கிடந்தன. பயிற்சி பெற்ற பெண்களின் போட்டோ ,பெயர், கிராமம், வட்டம் போன்ற தகவல்களும் இதில் உள்ளன. சான்றிதழின் மேல், தமிழக அரசின் முத்திரை உள்ளது. இதில் அப்போதைய கலெக்டர் முகமது அஸ்லம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் கையெழுத்தும் உள்ளது. இதோடு,பயிற்சி அளித்த நிறுவனத்தின் முத்திரையும் காணப்பட்டது. அரசின் வாயிலாக தொழில் பயிற்சி பெற்றவர்கள், அதற்கான சான்றிதழ் கிடைத்தால்தான், பொருளாதார ரீதியாக முன்னேறி, தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். பெண்களின் முன்னேற்றத்தை முக்கியமாக கருதும் அரசு, அவர்களுக்கான, பயிற்சி சான்றிதழ்களை,வழங்காமல் இப்படி கேட்பாரற்று போட்டுள்ளது,பயற்சி பெற்ற பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அலுவலக வளாக பொருட்கள் அறையில்,பிறர் பார்க்கும் வகையில்,சிதறி கிடந்த,இந்த சான்றிதழ்கள் குறித்து , ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் கேட்க, அனைத்தும் உடனடியாக,அப்புறப்படுத்தப்பட்டன. பி.டி.ஓ.,ஜெயலட்சுமி, "" இந்த சான்றிதழ்கள், 2005ல் வழங்க வேண்டியவை. இடையில் மராமத்து பணிகள் நடந்தது.அப்போது, இடம் மாறியிருக்கலாம். சில மாதங்களுக்கு முன் தான், இங்கு பணிக்கு வந்து உள்ளேன். தகவல் கிடைத்தவுடன், ஒன்றிய அலுவலர்கள் மூலம், சான்றிதழ் சேகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களிடம், ஒப்படைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...