எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30 க்குள் ஆன்- லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்- லைனில் பதிவு செய்யப்
படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு
இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும். இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த
ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...