மேல்நிலை சிறப்பு துணை தேர்வினர் நகல் கேட்டு விண்ணப்பம்: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு 3 நாட்கள் பதிவிறக்கம் செய்யலாம்

மேல்நிலை சிறப்பு துணை தேர்வினர் நகல் கேட்டு விண்ணப்பம்: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு 3 நாட்கள் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை,
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணை பொதுத் தேர்வு எழுதி, வங்கி சலானின் DGEs Copy யினை 2–9–2013–க்குள் தேர்வுத் துறையில் சமர்ப்பித்த தனித்தேர்வர்கள் மட்டும் 8–9–2013 முதல் 10–9–2013 வரை விடைத்தாள்களின் நகலினை examsonline.co.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கு மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் ஜூன் 2013–ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள TMR Code Number னை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, மறுகூட்டல் கோரி DGEs Copy யினை சமர்ப்பித்த தேர்வர்களுக்கு மறுகூட்டல் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பின்னர், தேர்வர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.tndge.in என்ற இணையதள முகவரியில் 8–9–2013 (இன்று) முதல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டணத்துடன் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 11–9–2013, 12–9–2013 தேதிகளில் மட்டும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கட்டணமாக மொழிப்பாடம் (தாள் 1 மற்றும் 2)–க்கு ரூ.1010–ம், ஆங்கிலம் (தாள் 1 மற்றும் 2)–க்கு ரூ.1010–ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.505–ம், மறுக்கூட்டல் கட்டணமாக மொழிப்பாடம், ஆங்கில மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் ரூ.305–ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205–ம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...