பள்ளி, கல்லூரிகளில் ஆசிட் இருப்பு மாவட்ட நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

காரைக்காலை சேர்ந்த மாணவி வினோதினி, சென்னையை சேர்ந்த வித்யா ஆகியோர் ஒரு தலை காதல் விபரீதத்தால் ஆசிட் வீசி கொல்லப்பட்டனர். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நாடெங்கிலும்
ஆசிட் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநகர போலீசும் ஆசிட் விற்பனை தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள், அரசு துறை அலுவலகங்களில் ஆசிட் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை மாவட்ட அளவிலான நீதிபதி அல்லது சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பதிவேட்டில் அவர்களது கையொப்பம் பெற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* ஆசிட் வீச்சு சம்பவங்களை தவிர்க்கும் வகையில் முந்தைய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஆசிட் வாங்குபவரிடம் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை நகல் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டளைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
* ஆசிட் வீச்சு சம்பவங்களில் சிக்கி பாதிக்கப்பட்ட நபருக்கு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் மாநிலங்களில் இயங்கும் மருத்துவமனைகளிலும், மாநில அரசு மருத்துவமனைகளும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் ஆய்வக உபயோகத்துக்கும், அரசு அலுவலகங்களில் துறை சார்ந்த பணிகளுக்கும் ஆசிட் பயன்பாடு அமலில் உள்ளது. இவ்வாறு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் ஆசிட் வைத்திருக்கும்பட்சத்தில் அதன் இருப்பு, பயன்பாடு, யாரால் எதற்காக பயன்படுத்தப்பட்டது போன்ற எல்லா விவரங்களையும் ஒரு பதிவேட்டில் எழுதி, அதில் உள்ள விவரங்கள் சரியா என்று மாவட்ட அளவிலான நீதிபதிகள் அல்லது சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்கள் ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தையும் நீதிபதிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் ஆசிட்டை தனி அறையில் வைத்து பாதுகாப்பதுடன், குறிப்பிட்ட அலுவலரை அறைக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.
* ஆசிட் விற்பனையாளர்கள், தவறான நபருக்கு விற்பனை செய்ததாக கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் அல்லது நீதிபதியே அந்த விற்பனையாளருக்கு^50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.
* அதிகபட்சம் 3 மாதத்துக்குள் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...