CLICK HERE TO VIEW VIDEO
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காவல்துறையினர் மதுராந்தகம் அருகே நடு
வழியி்ல் விட்டுவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று திருவல்லிக்கேணி கண்ணகி சிலை அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அனைவரையும் கைது செய்த போலீசார், மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இதனையடு்த்து மாலையில் அனைவரையும் விடுவித்த காவல்துறையினர், உண்ணாவிரதம் இருந்த 9 பேரையும், அவர்களுடன் இருந்த 6 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மதுராந்தகம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நள்ளிரவில் திடீரென நடுவழியில் இறக்கிவிட்ட காவல்துறையினர், விரைவாக அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் உதவி செய்ய யாருமில்லாத நிலையில், பார்வையற்ற பட்டதாரிகள் அங்கு தவித்து வருகின்ற