பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு


அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்வார்கள். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள பள்ளிக்கு கலந்தாய்வு மூலம் மாற்றப்படுவார்கள்.
ஆனால், கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில்,சமீப காலங்களில் இடமாறுதல் உத்தரவு விநோதமாக பிறப்பிக்கப்படுகிறது. இடம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர், தற்போது பணியாற்றும் பள்ளியிலும், இடமாறுதல் பெற்றுச் செல்லும் பள்ளியிலும் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.

ஒரு ஆசிரியர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு பள்ளியிலும் மூன்று நாட்கள் மற்றொரு பள்ளியிலும் பணியாற்ற உத்தரவு வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் மீது முழுமையான கவனம் செலுத்த முடியாது.

ஆசிரியர் பற்றாக்குறையால் தான், கள்ளர் சீரமைப்புத் துறை இந்த விநோத உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...