தேர்வு எழுத அனுமதி கோரி, முதுகலை பொறியியல் கல்வி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, எஸ்.நாகமுத்து, அண்ணா பல்கலைக்கு,10,000 அபராதம் விதித்தார்.
திருச்சி அரியலூர் ராஜலட்சுமி தாக்கல் செய்த மனு: நான், 2009 ல், பி.இ., முடித்தேன். உடையார் பாளையம் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக்கில், நவ.,2009 முதல், ஏப்., 2010 வரை, விரிவுரையாளராக, பணியாற்றினேன். பணியில் இருந்து விலகியபோது, அதற்கான சான்றிதழில், 2009, நவ., 9ம்தேதி முதல், 2010,ஜூலை 15ம்தேதி வரை,அவர்கள் நடத்திய இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றியதாக தெரிவித்து இருந்தனர். பின்,2010, செப்.,6ம்தேதி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், எம்.இ., சேர்ந்தேன். இந்நிலையில், அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திருச்சி, "முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுவதாகக் கூறி,2011, செப்.,24ம்÷தி, விசாரணை கமிட்டியில் ஆஜராகும்படி கூறினார். ஆஜராகிய நான், பாலிடெக்னிக்கில் பணியாற்றியதையும், எம்.இ.,யில் சேரும் முன், பணியில் இருந்து
விலகியதையும்,இரண்டு செமஸ்டர் தேர்வு எழுதியதையும், இன்னும், இரண்டு செமஸ்டர் பாக்கி உள்ளதையும் கூறினேன். அதன் பின், என்னை பகுதிநேர மாணவராக கூறி, மூன்றாவது செமஸ்டர் தேர்வு எழுத முடியாது என, தடுத்துவிட்டனர். இது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றேன். ஆனால், தேர்வு முடிவை நிறுத்தி வைத்து விட்டனர். அதேசமயம், நான்காவது செமஸ்டர் தேர்வை எழுத,"ஹால்டிக்கெட்' தந்தனர். பின்,2012, ஜூன் 13ம்தேதி, முழுநேர ஆசிரியராக இருந்து கொண்டு, மாணவராகவும் இருப்பவருக்கு, தேர்வு ஹால் டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது என, தேர்வு அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, எதேச்சதிகாரமானது. எனக்கு ஹால் டிக்கெட் தந்த பின், தேர்வு எழுத அனுமதி மறுப்பது தவறு. கல்லூரி நிர்வாகம் செய்த தவறுக்கு, என்னை பலிகடா ஆக்குகின்றனர். இந்த உத்தரவை, என்னை கலந்தாலோசிக்காமல் பிறப்பித்துள்ளனர். கோர்ட் தலையிட்டு, தேர்வு அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, கூறினார். தேர்வு எழுத அனுமதிக்க கோரி தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தன. அவர், "தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆவணங்களை பரிசீலிக்காமல், மேம்போக்காக விசாரித்துள்ளார். இதனால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஹால்டிக்கெட் குறித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவழக்குகளிலும் தலா 5,000அபராதம் விதித்து, அதை, மனுதாரருக்கு, ஆறு வாரங்களில் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.