ஒரு காரோட விலை 321 கோடி ரூபாயா?

car of monalisa, Ferrari model car, Ferrari GTO  250 car, அமெரிக்காவின் க்ரீன்விச்சைச் சேர்ந்தவர் விண்டேஜ். இவர் ஒரு கார் சேகரிப்பாளர். 

அவர் வைத்திருந்த கார்களிலேயே ஒரே ஒரு காரை மட்டும் கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். 

ஒரு நாள், 'இது பழைய கார்தானே.. இதை விற்றுவிடலாமே..' என்று எண்ணினார். 

 காரை ஏலம் விட முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 

ஏலத்தில் பெரியதாக ஒன்றும் வரப்போவதில்லை என்று நினைத்தவருக்கு, அவராலேயே நம்ப முடியாத அளவிற்கு அந்த நிகழ்வு நடந்தது. 

ஆம். 1963ம் வருடத்திய மாடல் காரான (Ferrari GTO 250) யாருமே எதிர்பார்க்காத தொகைக்கு ஏலம் போனது. 


 ஐம்பத்திரண்டு மில்லியன் டாலருக்கு (52 Million Dollar) அமெரிக்க பணக்ககாரர் ஒருவர் அதை ஏலத்தில் எடுத்தார். 

52 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

321 கோடி ரூபாய். (இப்பவே கண்ணை கட்டுதா..)

இவ்வளவு விலை போனதற்கு காரணம் என்ன? பெர்ராரி ஜிடிஓ 250 ரக காரில் அப்படி என்னதான் உள்ளது? இந்தளவிற்கு விலை போனதற்கு அது என்ன தங்கத்திலும் வைரத்திலும் இழைக்கப்பட்டதா? என்று ஆச்சர்ப்படுகிறீர்களா? 

கீழே அதற்கான விளக்கம் உள்ளது. தெரிந்துகொள்ளுங்கள். 

  • பெர்ராரி 250 ஜடிஓ காரை வடிவமைத்தது ஜியோட்டா பிசாரினி தலைமையிலான குழு.  
  • Ferrari GTO ரக கார்கள்  மொத்தமே முப்பத்தொன்பது கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 
  • லீ மேன்ஸ் 24 hour உள்ளிட்ட கார் பந்தயங்களுக்குகாக மட்டுமே இந்த கார்கள் தயாரிக்கப்பட்டன. 
  • பிரபல ரேஸ் வீரர்  ஸ்டெர்லிங் மாஸ் பயன்படுத்திய பச்சை நிற கார் இதற்கு முன்பு 35 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. 
  • இதுவும் ferrari 250 GTO மாடல் கார்தான். 
  • இந்த காரானது சாதாரண பயன்பாட்டுக்குப் பயன்படும் 250 GT SW மாடல் அடிப்படையில் அமைந்தது. 
  • 250 GT SW மாடலை வைத்தே இந்த பெராரி வகை கார்கள் தயாரிக்கப்பட்டன. 
  • 300 HP ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் V12 Engine இதில் பொருத்தப்பட்டது. 
  • 5 Speed Manual Transmission கொண்டது. 
  • மணிக்கு 280 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. 

39 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட பிறகு, இந்த வகை கார்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டது.  உலகத்தில் இப்பொழுது இந்த வகை Ferrari Model GTO 250 கார்கள் நான்கைந்து மட்டுமே உள்ளது. அதில் ஒன்றுதான் 312 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.

இந்த வகை கார்களை, கார் பிரியர்கள் கோடி கோடியாக கொட்டிக்கொடுத்து வாங்குவதால் இதற்கு "கார்களின் மோனலிஷா" என்ற செல்லப் பெயரும் உண்டு. 

 "Old is Gold" ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...