அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடக்கூடாது என முன்னாள் முதல்வர் அண்ணாவின் முக மூடியை அணிந்து கொண்டு தமுக்கடித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆயுதபூஜை,
சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் தமிழகத்தில் களைக்கட்டி வரும் சூழ்நிலையில், திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள காதிகிராஃப்ட் முன்பு இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலை கழகத்தினர் வித்தியாசமான முறையில் அண்ணாவின் முகமூடியை அணிந்தபடி தமுக்கடித்து ஆயுதபூஜைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து, திராவிடர் விடுதலை கழக திருச்சி மாவட்டச் செயலாளர் குமார் கூறும்போது, ''அரசு அலுவலங்களில் ஆயுதபூஜை கொண்டாடக் கூடாது என தமிழக முதல்வராக இருந்த அண்ணா, 67 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு அலுவகங்களில் ஆயுதபூஜை கொண்டாட தடைவிதிக்க வேண்டும். இதை எடுத்து சொல்லும் விதமாக அண்ணாவின் முகமூடியை அணிந்து கொண்டு தமுக்கு அடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆயுதபூஜைக்கு தடை விதிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார் காட்டமாக.