ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா!-VIKADAN NEWS

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 82வது பிறந்தநாள் விழா ராமேஸ்வரத்தில் அவர் படித்த பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடும்,
முன்னாள் ஜனாதிபதியும், அணுவிஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், ராமேஸ்வரத்தில் உள்ள எண்-1 துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். கலாமை பெருமைப்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இப்பள்ளியில் புரவலர்களாக இருந்து வருகின்றனர். ஆண்டு தோறும் அக்டோபர் 15ல் அப்துல்கலாமின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோன்று, டாக்டர் அப்துல்கலாமின் 82வது பிறந்த தினமான இன்று, அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ராமேஸ்வரம் எண்-1 பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் கல்விக்குழு தலைவர் கே.சி.ஏ.பாலமுருகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) ரீகா, ராமேஸ்வரம் ரோட்டரி சங்க செயலாளர் நாகராஜ், கல்விக்குழு உறுப்பினர் வி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அப்துல்கலாமின் நண்பரும், டாக்டருமான விஜயராகவன் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார். ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் குமார், 'கலாமின் எண்ணங்களை மாணவர்கள் நிறைவேற்றும் வகையில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்' என வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் விஜயராகவன் ரூ.30 ஆயிரம் மதிப்புடைய 100 பிளாஸ்டிக் சேர்களை அன்பளிப்பாக வழங்கினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியைகள் ரெஜினா, சுந்தரி, பத்மா ஆகியோர் பங்கேற்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...