கல்லூரி செய்முறை தேர்வு: ஆசிட் குடுவை வெடித்து மாணவி காயம்

சிவகங்கை அரசு கல்லூரியில், கவனக்குறைவாக செய்முறை தேர்வில் ஈடுபட்ட மாணவி மீது, "ஆசிட்" தெறித்து, கண் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக,பெற்றோர் புகார்
கூறியுள்ளனர்.

மதுரை, மேலூர் அருகேயுள்ள சின்னச்சூரக்குண்டுவைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள், பாண்டி மீனாள், 20. இவர், சிவகங்கை, மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் பி.எஸ்சி., படிக்கிறார். கடந்த, 23ம்தேதி, கல்லூரி ஆய்வகத்தில் செய்முறை தேர்வு நடந்தது. இதில், அவர் பங்கேற்றார்.

அப்போது, பீனால், "நைட்ரக்ஸ் ஆக்சைடு" கலவையை கண்ணாடி குடுவையில் ஊற்றிய போது, குடுவை வெடித்து, பாண்டி மீனாள் முகத்தில் சிதறியது. இதில், அவரது முகம், இடது கையில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, இடது கண்ணில் சிக்கிய கண்ணாடி துகள்கள் அகற்றப்பட்டன. மாணவியின் இடது கண் பார்வை பறிபோகும் அச்சம் உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்ததாக, பெற்றோர் கூறினர்.

மாணவி கூறுகையில், "பல்கலை செய்முறை தேர்வு நடந்தது; பீனாலுடன், "சல்பியூரிக் ஆக்சைட்"டை கலப்பதற்கு பதில், "நைட்ரக்ஸ் ஆக்சைட்"டை கலந்ததால், குடுவை வெடித்தது. கோட் மட்டுமே அணிந்திருந்தேன்.

கண் கண்ணாடி, கையுறை அணிந்து முன்எச்சரிக்கையாக இருந்திருந்தால், இதை தவிர்த்திருக்கலாம். ஆய்வக மாணவ, மாணவியருக்கு, தகுந்த முன் தடுப்பு கருவிகளை வழங்க, கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

முதல்வர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது, "வேதியியல் துறை மாணவி ஒருவரின் முகத்தில் ஆசிட் பட்டது உண்மைதான். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ளோம். இனிமேல், இக்கல்லூரி ஆய்வக மாணவர்கள் முன்எச்சரிக்கையுடன் செயல்பட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...