மனதில் கொள்ளுங்கள்.


'' பாம்பே ரத்த குரூப் '' ஒரு பத்துவருடத்திற்கு முன்பெல்லாம் பொதுமக்களிடையே ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருந்தது ஆனால் தற்போது அந்தநிலை இல்லை, ரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிந்து
பலரும் ரத்ததானம் செய்ய முன்வருகின்றனர் . இந்த சூழலில் ஒரு அறிய தகவலினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் 'பாம்பே ஆர்.எச். நெகடிவ்' இதுவும் ஒருவகை ரத்தப் பிரிவுதான். O−,O+,A-,A+,B-,B+,AB−,AB+ இந்தவகை இரத்தம் உங்களுக்கு நன்றாக அறிந்திருக்கும் , ஆனால் 'பாம்பே ஆர்.எச். நெகடிவ்' பற்றி அறிவது உங்களுக்கு புதியதாக இருக்கலாம். இந்த ரத்தம் அரிய வகையான ஏ.பி.ஓ.,ரத்த குரூப்பை சேர்ந்தது . "பெயர்" பாம்பே ஆர்.எச். நெகடிவ் இந்த அரிய வகை ரத்தம், சிலருக்கு மட்டுமே இருக்கும். இந்தியாவில்,இந்த அரிய வகை ரத்த குரூப், முதல் முதலில் மும்பையில் கண்டு பிடிக்கப் பட்டதால், இதற்கு மும்பே ரத்த குரூப் என்று பெயர் சூட்டப் பட்டது. "வெறும் 70 பேருக்கு மட்டும்" கிழக்கிந்தியர்கள், ஜப்பபானியர்கள், காசினியர்கள் மத்தியில் மட்டடுமே இந்த வகை ரத்த குரூப் உள்ளவர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இந்த அரியவகை இரத்தப்பிரிவு கொண்டவர்கள் அதுவும் ரத்த தானம் தானம் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மொத்தம் 70 பேர்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. "மிகவும் அவசியம்" மேலும் எத்தனை பேருக்கு " பாம்பே ஆர்.எச். நெகடிவ் " இந்தவகை ரத்தம் இருக்கிறது என்பது அவரவர்கள் பரிசோதித்துக் கொண்டால் மட்டுமே தெரியவரும் . நமக்கு எந்தவகை ரத்தம் உள்ளது என்பது தெரியாத வேளையில் விபத்தோ அல்லது ரத்தக் குறைபாடோ என அவசரதேவையில் நமக்கு "பாம்பே ஆர்.எச். நெகடிவ்" இருந்தால் பெரும் அவஸ்தைக்குள் ஆகலாம் , ஆகவே நாம் ஒவ்வொருவரும் தனக்கு எந்தவகை ரத்தம் என்பது அவசியம் தெரிந்து இருக்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு "பாம்பே ஆர்.எச். நெகடிவ்" இந்தவகை ரத்தப் பிரிவு இருந்தால் முடிந்தவரை எல்லோருக்கும் இதனை தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதனையும் மனதில் கொள்ளுங்கள். ~மகேந்திரன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...