ஆசிரியர்கள் கலக்கம்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.பள்ளிகளில் ஆகஸ்ட் மாத
மாணவர்களின் வருகை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிகளில் 30 மாணர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, நடப்பாண்டிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன . பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...