காரைக்குடியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி மீனாம்பாள். இவர்களுக்கு சூர்யா,13, என்ற மகனும், புவனேஸ்வரி,7, என்ற மகளும் உள்ளனர். மீனாம்பாள் தேவகோட்டை
ஆர்.டி.ஓ.,விடம், தனது மகன் சூரியாவை, அரண்மனை ஓ.சிறுவயலைச் சேர்ந்த காளீஸ்வரன், ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக, வேலைக்கு வைத்துள்ளார், என புகார் அளித்தார். ஆர்.டி.ஓ.,கணேசன், தாசில்தார் இளங்கோ, சிறுவனை மீட்டனர். அப்போது சூர்யா, மீண்டும் ஆடு மேய்க்க செல்வதாகவும், பெற்றோரிடம் அனுப்பி வைத்தால், பிச்சை எடுக்க வைத்து விடுவார்கள் என கூறினார். படிக்க வைத்தால் படிப்பதாக கூறினார். இது குறித்து, தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. கலெக்டர் ராஜாராமன் உத்தரவின் பேரில், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, சாக்கோட்டை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பீட்டர் ராஜா, சிறுவனின் இருப்பிடமான ராஜீவ் காந்தி நகருக்கு சென்றனர். சூர்யா மற்றும் அவனது தங்கை புவனேஸ்வரி,7, பிரபு என்பவரின் மகன் முனியாண்டி,10, முருகனின் மகன் மாவீரன்,10, மகள்கள் கிருஷ்ணவேணி, 8, தமிழரசி,6, சத்தியேந்திரன் மகன் முரளி,10, மகள் நந்தினி,8, ஆகிய எட்டு பேர், பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரையும், ஓ.சிறுவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, வயதுக்கேற்ற வகுப்பு என்பதன் அடிப்படையில், முறையே, ஒன்று, இரண்டு, ஐந்தாம் வகுப்பில், சேர்த்தனர்.