மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒன்றரை ஆண்டிற்கு முன்னர் நாம் பதிவு செய்த ஒட்டுமொத்த நம் இடைநிலை ஆசிரிய சமுதாயத்திற்காகவும்,வருங்கால சந்ததிக்காகவும் SSTA தொடுத்த சம்பள வழக்கின் "அவிடவிட் "இன்ஒரு பகுதி.

அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்.நம்முடைய நியாயமான
ஒரே கோரிக்கையான    ஊதிய மாற்றம்  பெற்றிட நம்முடைய மாவட்ட  மாறுதல் வழக்கில் எவ்வளவு கடுமையான சவால்களை சந்தித்து
சாதித்தோமோ!!!அதனை விட
பன்மடங்கு சம்பள வழக்கில் நாம் ஒன்றரை ஆண்டிற்கு முன்னரே,இன்று நிறையபேருக்கு தோன்றக்கூடிய சிந்தனைகள்,கேள்விகள் மேலும் , அரசாணை   340 நாள் 26.08.2010 இல் உள்ள விவரங்களையும் ,நம்முடைய வழக்கின் அவிடவிடில் சேர்த்துள்ளோம்.அந்த அவிடவிட் நகல் தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.இந்த வழக்கில் தான் மூன்றுநபர் ஊதியக்குழு தலைவர் 9300-4200 ஊதியம் பரிசீலிப்பதாக நமக்கு பதில் அனுப்பியது.எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிர்க்கு அழைத்த அழைப்புக்கடிதத்தில் தெளிவாக பழைய ஊதியவிகிதம் 4500-125-7000. கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிஉள்ளோம்.அதேபோல் ஒரேதகுதி ஒரே ஊதியம் என்ற உச்சநீதிமன்ற ஆணைகளையும் பின்பற்ற கோரியுள்ளோம்.
மேலும் ஒரு வழக்கினையும். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிங்கர்களை கொண்டு விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம்.எனவே,உறுதியாக இழந்த சம்பளத்தினை பெற்றே தீருவோம்.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...