நவம்பர் 25 வரலாறு நிகழ்வுகள்

1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம்
ஹென்றியின் மகன் வில்லியம்
அடெலின் பயணஞ்செய்த கப்பல்
ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில்

கொல்லப்பட்டான்.
1542 - ஆங்கிலேயப் படைகள்
சொல்வே மொஸ் என்ற இடத்தில்
ஸ்கொட்லாந்துப் படைகளைத்
தோற்கடித்தன.
1667 - கவ்காசியாப் பகுதியில்
ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 80,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1703 - பிரித்தானியாவில் மிகப்
பெரும் சூறாவளி பதியப்பட்டது.
9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1758 - பிரித்தானியப் படைகள்
பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne
( பென்சில்வேனியா ) ஐக் கைப்பற்றினர்.
1783 - கடைசி பிரித்தானியப்
படைகள் நியூயோர்க் நகரை விட்டுப்
புறப்பட்டன.
1795 - சுதந்திரப் போலந்தின்
கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட்
பொனியாட்டோவ்ஸ்கி பதவியில்
இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு
நாடு கடத்தப்பட்டான்.
1833 - சுமாத்திராவில் 8.7
நிலநடுக்கம் ஏற்பட்டது.
1839 - இந்தியாவில் பலத்த
சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின்
கொரிங்கா நகரம் முற்றாக
சேதமடைந்தது. 30,000 பேர் வரையில்
கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல்
டைனமைட்டுக்குக் காப்புரிமம்
பெற்றார்.
1905 - டென்மார்க் இளவரசன் கார்ல்
நார்வே வந்து சேர்ந்தான். இவன்
பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற
பெயரில் நார்வேயின் மன்னனானான்.
1926 - ஐக்கிய அமெரிக்காவின்
ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற
சூறாவளியில் 76 பேர்
கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன
சோவியத் ஒன்றியம் தம்
மீது படையெடுத்தால்
அதனை கூட்டாக எதிர்கொள்ள
பேர்லின் நகரில் ஒப்பந்தம்
செய்து கொண்டன.
1944 - இரண்டாம் உலகப் போர் : ஐக்கிய
இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில்
வூல்வேர்த் கடைத்தொகுதியில்
ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை
வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - ஐக்கிய அமெரிக்காவின்
வடகிழக்கில் ஏற்பட்ட
சூறாவளியினால்
மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர்
கொல்லப்பட்டனர்.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா
படைகளை எதிர்க்க கொரியப் போரில்
ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின்
மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The
Mousetrap) திரைப்படமாக
வெளிவந்தது.
1960 – டொமினிக்கன் குடியரசில்
மிராபெல் சகோதரிகள்
படுகொலை செய்யப்பட்டனர்.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ்
பாப்படபவுலொஸ் இராணுவப்
புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம்
இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து
மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர்
இந்தியா விமானம் கடத்தப்பட்டு
தென்னாபிரிக்காவின் டர்பன்
நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற
சூறாவளி தாக்கியதில் 1,036 பேர்
கொல்லப்பட்டனர்.
1992 - செக்கொசிலவாக்கியாவின்
நாடாளுமன்றம் நாட்டை செக்
குடியரசு , சிலவாக்கியா என
இரண்டாக ஜனவரி 1 , 1993
இலிருந்து பிரிக்க
முடிவெடுத்தது.
2000 - அசர்பைஜான் தலைநகர் பக்கு
நகரில் இடம்பெற்ற 7.0 அளவை
நிலநடுக்கத்தில் 26 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - சீனாவின்
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்
பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க
விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1844 - கார்ல் பென்ஸ் ஜெர்மானிய
வாகனப்பொறியாளர் (இ. 1929)
1952 - இம்ரான் கான் , பாகிஸ்தானின்
முன்னாள் கிரிக்கெட் வீரர்.

இறப்புகள்
1974 - ஊ தாண்ட் , பர்மியர் , முன்னாள்
ஐநா செயலாளர் (பி. 1909 )
1979 - பெல்ஜியத் தமிழறிஞர்
டெசி (பி. 1898 )

சிறப்பு நாள்
பொஸ்னியா ஹெர்செகோவினா -
தேசிய நாள் ( 1943)
சுரிநாம் - விடுதலை நாள் ( 1975 )
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளை அடக்கும்
அனைத்துலக நாள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...