இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை கடக்கும் ஐசான் வால் நட்சத்திரம்.

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15
மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம்
சூரியனுக்கு வெகு அருகில்
செல்கிறது. உலகத்தில் உள்ள
விண்ணியல் ஆர்வலர்களின் கண்கள் அனைத்தும்

ஐசான்
வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன.

சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன
நடக்கும் என்று அத்தனை பேர்
மனதிலும் உள்ளது.
படு வேகமாக
சூரியனை நோக்கி போய்க்
கொண்டிருக்கும் ஐசான்
இன்று நள்ளிரவு சூரியனை மிக
அருகே நெருங்கப் போகிறது.

அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை,
பொசுங்கிப் விடும்
என்று பொதுவான
கருத்து இருந்தாலும் அது தப்பிப்
பிழைக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர்
நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஐசான் வால்நட்சத்திரம்
இன்று சூரியனுக்கு மிக
அருகே போகும்
காட்சியை நேரடியாக
தொலைநோக்கிகள் மூலம் காண
பல்வேறு நாடுகளில் உள்ள
விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள்
ஏற்பாடு செய்துள்ளன.

ஐசான் வால் நட்சத்திரம்
சூரியனை நெருங்கும்
காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல.
அதாவது நேரடியாக
பார்ப்பது நல்லதல்ல. அதிலும்
சூரியனை நேராக பார்த்தால் கண்
பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம்.
விண்ணில் நிலை கொண்டுள்ள
சோஹோ என்று அழைக்கப்படும்
சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக்
அப்சர்வேட்டரி என்ற
விண்வெளி தொலைநோக்கி மூலமும்,
ஐசான் சூரியனை நெருங்கும்
காட்சியை நேரடியாக காட்ட
நாசா ஏற்பாடு செய்துள்ளது.
சோஹோ மூலம் கிடைக்கும்
வீடியோ காட்சிகளை நாம் காணவும்
நாசா ஏற்பாடு செய்துள்ளது. http://sohowww.nascom.nasa.gov/home.html
இங்கே போனால் அதைப் பார்க்கலாம்.
சோஹாவில் பல்வேறு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும்
சூரியனை ஆய்வு செய்வதற்காக
பொருத்தப்பட்டவையாகும்.

இந்த
சோஹா, 1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும்.
இன்னும் சிறப்பாக
செயல்பட்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...