1384 - பெண்ணாக இருந்தாலும்
பத்து வயது "ஜாட்வீகா" என்பவள்
போலந்தின் மன்னனாக
முடிசூடினாள்.
1532 - ஸ்பானியத்
தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ
இன்கா பேரரசின் மன்னன்
அட்டஹுவால்பாவைத்
தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1632 - சுவீடனின் குஸ்டாவிஸ்
அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
1846 - இலங்கையில் விதவைகள்
மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 - அரசுக்கெதிராகப்
புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி
ரஷ்ய எழுத்தாளரான பியோதர்
தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும்
தண்டனை பின்னர் கடைசி நேரத்தில்
நிறுத்தப்பட்டது.
1885 - கனடாவின் மேட்டிஸ்
பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல்
தூக்கிலிடப்பட்டார்.
1896 - முதற்தடவையாக மின்சாரம்
மின்னாக்கி
ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது.
இது நடந்தது நியூயார்க் நகரில்.
1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக்
குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 - ஒக்லகோமா ஐக்கிய
அமெரிக்காவின் 46வது மாநிலமாக
இணைந்தது.
1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய
விமான சேவை குவாண்டாஸ்
ஆரம்பிக்கப்பட்டது.
1933 - ஐக்கிய அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தூதரக
உறவை ஆரம்பித்தன.
1940 - இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானியாவின் விமானப்
படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க்
நகரில் குண்டுகளை வீசின.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் டியூரென் நகரம்
கூட்டுப் படைகளின் குண்டுத்
தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 - யுனெஸ்கோ நிறுவனம்
ஆரம்பிக்கப்பட்டது.
1945 - பனிப்போர்: ஐக்கிய
அமெரிக்காவின் இராணுவம்
ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88
பேரை தனது வானியல்
தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக
இரகசியமாக நாட்டுக்குள்
அனுமதித்தது.
1965 - சோவியத்தின் வெனேரா 3
விண்கப்பல் வெள்ளி
கோளுக்கு செலுத்தப்பட்டது.
வேறொரு கோளின்
தரையை அடைந்த
முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 - நாசா
மூன்று விண்வெளி வீரர்களுடன்
ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில்
விண்ணுக்கு அனுப்பியது.
1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப்
பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற
தேர்தல்களில் பெனசீர் பூட்டோ
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 - சார்ஸ் நோய் முதன் முதலில்
சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில்
பதியப்பட்டது.
பிறப்புக்கள்
1922 - ஜோசே சரமாகூ, நோபல்
பரிசு பெற்ற போர்த்துக்கேய
எழுத்தாளர்
1930 - சின்னுவ அச்சிப்பே , நைஜீரிய
எழுத்தாளர்
1982 - அமாரே ஸ்டெளடமையர் ,
அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல்
பரிசு பெற்றவர் (பி. 1928 )
2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல்
பரிசு பெற்ற பொருளியல் நிபுணர்
(பி. 1912)
சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்
பத்து வயது "ஜாட்வீகா" என்பவள்
போலந்தின் மன்னனாக
முடிசூடினாள்.
1532 - ஸ்பானியத்
தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ
இன்கா பேரரசின் மன்னன்
அட்டஹுவால்பாவைத்
தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1632 - சுவீடனின் குஸ்டாவிஸ்
அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
1846 - இலங்கையில் விதவைகள்
மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 - அரசுக்கெதிராகப்
புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி
ரஷ்ய எழுத்தாளரான பியோதர்
தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும்
தண்டனை பின்னர் கடைசி நேரத்தில்
நிறுத்தப்பட்டது.
1885 - கனடாவின் மேட்டிஸ்
பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல்
தூக்கிலிடப்பட்டார்.
1896 - முதற்தடவையாக மின்சாரம்
மின்னாக்கி
ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது.
இது நடந்தது நியூயார்க் நகரில்.
1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக்
குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 - ஒக்லகோமா ஐக்கிய
அமெரிக்காவின் 46வது மாநிலமாக
இணைந்தது.
1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய
விமான சேவை குவாண்டாஸ்
ஆரம்பிக்கப்பட்டது.
1933 - ஐக்கிய அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தூதரக
உறவை ஆரம்பித்தன.
1940 - இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானியாவின் விமானப்
படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க்
நகரில் குண்டுகளை வீசின.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் டியூரென் நகரம்
கூட்டுப் படைகளின் குண்டுத்
தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 - யுனெஸ்கோ நிறுவனம்
ஆரம்பிக்கப்பட்டது.
1945 - பனிப்போர்: ஐக்கிய
அமெரிக்காவின் இராணுவம்
ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88
பேரை தனது வானியல்
தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக
இரகசியமாக நாட்டுக்குள்
அனுமதித்தது.
1965 - சோவியத்தின் வெனேரா 3
விண்கப்பல் வெள்ளி
கோளுக்கு செலுத்தப்பட்டது.
வேறொரு கோளின்
தரையை அடைந்த
முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 - நாசா
மூன்று விண்வெளி வீரர்களுடன்
ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில்
விண்ணுக்கு அனுப்பியது.
1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப்
பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற
தேர்தல்களில் பெனசீர் பூட்டோ
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 - சார்ஸ் நோய் முதன் முதலில்
சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில்
பதியப்பட்டது.
பிறப்புக்கள்
1922 - ஜோசே சரமாகூ, நோபல்
பரிசு பெற்ற போர்த்துக்கேய
எழுத்தாளர்
1930 - சின்னுவ அச்சிப்பே , நைஜீரிய
எழுத்தாளர்
1982 - அமாரே ஸ்டெளடமையர் ,
அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல்
பரிசு பெற்றவர் (பி. 1928 )
2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல்
பரிசு பெற்ற பொருளியல் நிபுணர்
(பி. 1912)
சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்


