நவம்பர் 19 வரலாறு நிகழ்வுகள்


1493 - கொலம்பஸ் முதல் நாள் தான்
கண்ட தீவின்
கரையை அடைந்து அதற்கு சான்
ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர்
சூட்டினார்.
1794 - அமெரிக்கப் புரட்சிப் போரின்

பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத்
தீர்க்கும் பொருட்டு ஐக்கிய
அமெரிக்காவுக்கும்
பிரித்தானியாவுக்கும் இடையில்
உடன்பாடு எட்டப்பட்டது.
1816 - வார்சா பல்கலைக்கழகம்
அமைக்கப்பட்டது.
1881 - உக்ரேனில் ஒடீசா நகரில்
விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 - சோவியத் தலைவர் ஜோசப்
ஸ்டாலினின்
இரண்டாவது மனைவி தனது வீட்டில்
மர்மமான முறையில் இறந்து கிடக்கக்
காணப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS
சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற
போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த
மோதலில் இரண்டும் மூழ்கின. இதில்
645 ஆஸ்திரேலியக்
கடற்படையினரும் 77 நாசி
ஜெர்மனியக் கடற்படையினரும்
கொல்லப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத்
படையினர் ஸ்டாலின்கிராட் நகர்
மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர்.
இது பின்னர்
அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1946 - ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து,
சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 - அப்போலோ 12 விண்கலத்தில்
சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன்
ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த
மூன்றாவது, நான்காவது மனிதர்கள்
என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 - பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர்
பெலே தனது 1,000வது கோலைப்
பெற்றார்.
1977 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத்
அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல்
சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற
முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 - போர்த்துக்கல் போயிங்
விமானம் ஒன்று மெடெய்ரா என்ற
இடத்தில் விபத்துக்குள்ளாகியதில்
130 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - இலங்கை இராணுவத்தின் வட
மாகாணத் தளபதி பிரிகேடியர்
ஆரியப்பெரும யாழ்ப்பாணம் , கட்டுவன்
என்ற இடத்தில் கண்ணிவெடித்
தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 - மெக்சிக்கோ நகரில்
எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும்
வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ
விபத்தில் சிக்கி 500 பேர்
கொல்லப்பட்டனர்.
1985 - பனிப்போர்: அமெரிக்க அதிபர்
ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர்
மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும்
ஜெனீவாவில் முதன் முறையாகச்
சந்தித்தனர்.
1991 - தமிழீழ காவல்துறை
நிறுவப்பட்டது.
1999 - மக்கள் சீனக் குடியரசு
தனது முதலாவது
சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 - மகிந்த ராஜபக்ச இலங்கையின்
5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப்
பதவியேற்றார்.

பிறப்புக்கள்
1831 - ஜேம்ஸ் கார்ஃபீல்ட் , ஐக்கிய
அமெரிக்காவின் 20வது குடியரசுத்
தலைவர் (இ. 1881 )
1835 - ராணி லட்சுமிபாய் , இந்திய
இராணி (இ. 1858 )
1909 - பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய
மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005 )
1917 - இந்திரா காந்தி , இந்தியப்
பிரதமர் (இ. 1984)
1925 - சலில் சௌதுரி , வங்காள
இசையமைப்பாளர் (இ. 1995)

இறப்புகள்
1998 - டெட்சுயா ஃபுஜித்தா,
யப்பானிய வானிலை அறிஞர் (பி.
1920)
2008 - எம். என். நம்பியார் , நடிகர் (பி.
1919 )

சிறப்பு நாள்
மாலி - விடுதலை நாள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...