284 - டயோக்கிளேசியன் ரோமப்
பேரரசின் மன்னன் ஆனான்.
1194 - இத்தாலியின் பலேர்மோ நகரம்
ஆறாம் ஹென்றியால்
கைப்பற்றப்பட்டது.
1658 - இலங்கையில் போர்த்துக்கீசர்
மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள்
டச்சு ஆட்சியாளர்களினால்
நன்றி தெரிவிப்பு நாளாகப்
பிரகடனப்படுத்தப்பட்டது.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம்
சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில்
ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத்
தோற்கடித்தான்.
1910 - பிரான்சிஸ்கோ மடேரோ
மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ்
என்பவரைப் பதவியில்
இருந்து அகற்றிவிட்டதாகவும்
தன்னை அதிபராகவும் அறிவித்தார்.
மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
1917 - உக்ரேன் குடியரசாக
அறிவிக்கப்பட்டது.
1923 - ஜேர்மனியின் நாணயம்
பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக
மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1
திரில்லியன் பேப்பியர்மார்க்)
1936 - ஸ்பானிய அரசியல்தலைவர்
ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1940 - இரண்டாம் உலகப் போர்:
ஹங்கேரி , ருமேனியா ,
சிலவாக்கியா ஆகியன
அச்சு அணி நாடுகள் அமைப்பில்
இணைந்தன.
1947 - இளவரசி எலிசபெத் இளவரசர்
பிலிப்பை திருமணம் புரிந்தார்.
1962 - சோவியத் ஒன்றியம் தனது
ஏவுகணைகளை கியூபாவில்
இருந்து அகற்றுவதாக
வாக்குறுதி அளித்ததை அடுத்து,
ஐக்கிய அமெரிக்கா கரிபியன்
நாட்டுக்கெதிராக கொண்டுவந்த
பொருளாதாரத் தடைகளை திரும்பப்
பெற்றுக் கொண்டது.
1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப்
பின் ஜனதா விமுக்தி பெரமுன
தலைவர் றோகண விஜேவீர
விடுதலை செய்யப்பட்டார்.
1979 - சவுதி அரேபியாவில்
மெக்காவில் காபா மசூதியைத்
தாக்கிய சுணி முஸ்லிம்
தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக்
கைதிகளாக்கினர். பிரெஞ்சுப்
படைகளின் உதவியுடன் இத்தாக்குதல்
முறியடிக்கப்பட்டது.
1985 - மைக்ரொசொஃப்ட்டின்
விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல்
கோர்பசேவுக்கும் இடையே இரு
அணு உலைகளைக் கூடங்குளத்தில்
அமைப்பது என்ற ஒப்பந்தம்
கையெழுத்தானது. எனினும்
சோவியத்
கலைப்பை அடுத்து இத்திட்டம்
கைவிடப்பட்டது.
1992 - இங்கிலாந்தில் வின்சர்
அரண்மனையில் தீ பரவியதில் பலத்த
சேதம் ஏற்பட்டது.
1993 - மகெடோனியாவில் விமானம்
ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115
பேரும் 8 சிப்பந்திகளும்
உயிரிழந்தனர்.
1994 - அங்கோலா அரசுக்கும்
யுனீட்டா தீவிரவாதிகளுக்கும்
இடையே சாம்பியாவில் போர்
நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியதில்
19 ஆண்டு கால உள்நாட்டுப் போர்
முடிவுக்கு வந்தது. எனினும்
அடுத்த ஆண்டு போர் மீண்டும்
ஆரம்பமாயிற்று.
1998 -
பன்னாட்டு விண்வெளி நிலையத்தின்
முதலாவது பகுதி சாரியா
விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1999 - மன்னார் மடு தேவாலயம்
மீது நடத்தப்பட்ட குண்டுத்
தாக்குதலில் 42 தமிழர்கள்
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1750 - திப்பு சுல்தான் , மைசூர்
பேரரசன் (இ. 1799 )
1901 - நாசிம் ஹிக்மட் , துருக்கிய
கவிஞர் (இ 1963 )
1942 - ஜோ பைடன் , அமெரிக்க
துணைத் தலைவர்
1980 - ஷாலினி , தென்னிந்தியத்
திரைப்பட நடிகை
இறப்புகள்
1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய
எழுத்தாளர் (பி. 1828)
சிறப்பு நாள்
யுனிசெஃப் - குழந்தைகள் நாள்
மெக்சிக்கோ - புரட்சி நாள் (1910 )
வியட்நாம் - ஆசிரியர் நாள்
