நவம்பர் 21 வரலாறு நிகழ்வுகள்


 1272 - மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான். 1789 - வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின்
தளபதியானான். 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமஸ் ஆல்வா எடிசன் அறிவித்தார். 1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது. 1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். 1916 - பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். 1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதால் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா. 1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது. 1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது. 1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. 1969 - ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது. 1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன. 1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 1980 - தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது. 1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர். 1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது. 1990 - மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. 1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர். 2004 - டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது. பிறப்புக்கள் 1694 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778 ) 1902 - ஐசக் பாஷவிஸ் சிங்கர் , போலந்து-அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991 ) 1924 - மில்கா பிலானிஞ்ச், முன்னாள் யுகோசுலாவியப் பிரதமர் (இ. 2010 ) 1925 - வேல்ஜ்கோ கடிஜேவிக், முன்னாள் யுகோசுலாவிய இராணுவத் தளபதி 1931 - ரேவாஸ் தொகொனாத்சே, ஜோர்ஜிய அறிவியலாளர், (இ. 1985) 1948 - மைக்கல் சுலைமான், முன்னாள் லெபனானிய அரசுத்தலைவர் 1970 - ஜஸ்டின் லாங்கர், முன்னாள் ஆத்திரேலிய கிரிக்கெட் வீரர் இறப்புகள் 1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888) 1996 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926 )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...