சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் மீண்டும், தினமும், 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி
பாதிப்பால் கரூர், திருப்பூர், கோவையில் ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தொழில் முடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த மே மாதம் வரை தமிழகம் முழுவதும், தொடர் மின் தடை காரணமாக, ஏற்றுமதி நிறுவனங்களின் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வந்தது. பின், ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை காரணமாக, காற்றாலைகளில் அதிகளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்தடை பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. தினமும் மின்தடை என்பது மிகவும் அரிதாக இருந்தது.காற்றாலையில் மின் உற்பத்தியின் சரிவு காரணமாக, தமிழகத்தில் மின் பற்றாக்குறை, 1,580 மெகாவாட் அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக மின்தடை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும், ஒரு மணி நேரம் என்று இருந்த மின்தடை, தற்போது படிப்படியாக உயர்ந்து, நகர பகுதியில் தினமும், 6 மணி நேரத்துக்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது.
கரூர் கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இங்கு ஸ்க்ரீன், தலையணை உறை, மேஜை விரிப்புகள், கைகுட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி, போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் 3,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது
இதுகுறித்து, ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஸ்டீபன் பாபு கூறியதாவது:எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், தினமும், 6 மணி நேரத்துக்கு மேல் மின் தடை அமலில் உள்ளது. இதனால், தொடர்ந்து ஒரு ஷிப்ட் கூட முழுமையாக உற்பத்தியில் ஈடுபட முடியாமல் திணறி வருகிறோம். இதனால் தினமும், இரண்டு கோடி ரூபாய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, மொத்த உற்பத்தியில், 30 சதவீதம்.இதை சமாளிக்க மீண்டும் ஜெனரேட்டர் மூலம் மிஷின்களை இயக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். திடீரென ஏற்பட்டுள்ள மின்தடையால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால், விலையை உயர்ந்த முடியாது என்பதால், அந்த நஷ்டத்தை ஏற்மதியாளர்கள் தான் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தினமும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை, மின் தடை ஏற்படுவதால், தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மின்தடையால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் மத்தியில், கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில், 65 சதவீதம் கோவையில் தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுகளே பயன்படுத்தப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை, 45 சதவீதமாக குறைந்துள்ளது. பம்ப்செட் தொழில் துறையினருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, 15 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தினசரி 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான தென்னை நார் உற்பத்தி ஆலைகள், பேப்பர் கோன் ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் உற்பத்தியும் குறைந்துள்ளதால், அன்றாடம் தேவைப்படும் காய்கறி விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:பின்னலாடை தொழிலில் முன்னணியில் இருக்கும் திருப்பூரில், சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தொழில் சூடு பிடித்துள்ளது. நிறுவனங்கள், முழு அளவில் இயங்க துவங்கியுள்ளன. எங்கு பார்த்தாலும், "ஆட்கள் தேவை' விளம்பரங்கள் மீண்டும் தென்பட துவங்கியுள்ளன. இந்நிலையில், தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட துவங்கியிருப்பது, தொழில் துறையினரை, பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், பின்னலாடை "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு, 20 மணி நேரம் இயங்கும், கம்பெனிகள், மின்தடையால் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஜெனரேட்டரை பயன்படுத்துகின்றன. இதனால், உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. வெளிநாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுவதால் ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டில் நடக்கும் விற்பனையால் ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது மீண்டும் தலைகாட்டும் மின்தடையால், இந்த வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பனிகாலம் துவங்கிய நிலையில், காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால்,மின் வெட்டு, மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
தப்பியது நீலகிரி, சேலம்:தினமும் 6 மணி நேர மின்வெட்டு, சென்னையில் அமல்படுத்தப்பட வில்லை. ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், சேலம் மாவட்டத்திலும் மின் வெட்டு இல்லை. மற்ற எல்லா மாவட்டங்களிலும் மின் வெட்டு கடுமையாக உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதற்கும் நாளொன்றுக்கு, 75 மெகாவாட் மின்சாரமே தேவைப்படுகிறது. குளிர் பிரதேசம் என்பதால், மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு மின் பயன்பாடு குறைவு. அது மட்டுமின்றி, தேயிலை உற்பத்திக்கு மின்சாரம் அவசியம் என்பதுவும், இங்கு மின் வெட்டு அமல் செய்யப்படாததற்கு, முக்கிய காரணமாக உள்ளது.
10 மணி நேரம் மின் வெட்டு: மதுரை நகரில் பகலில் 6 மணி நேரமும், புறநகரில் 10 மணி நேரமும் சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தவிர, பற்றாக்குறையின் அடிப்படையில் இரவில் நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு முதல் மூன்று மணி நேரமும் மின் வெட்டு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்ததால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், 2014 ஜனவரி வரை நீடிக்கும் எனவும், வாரிய வட்டார தகவல் தெரிவிக்கிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நகர்பகுதிகளில் 6 மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 8 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய பகுதிகளுக்கு மூன்று மணிநேரத்திற்கும் குறைவாக மும்முனை மின்சாரம் கிடைப்பதால், மோட்டார்கள் இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பஞ்சாலை, அட்டைபெட்டி தயாரித்தல், மரஅறுவை, அரிசி, மாவு அரைக்கும் தொழில், பால், ஐஸ்கிரீம், குளிர்பான வியாபாரம், தொழில்
பேட்டையில் உள்ள சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேனி : தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 500 விசைத்தறிகள் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில், கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்படுகிறது.
ராமநாதபுரம்: நகர் பகுதிகளில் ஆறரை மணிநேரமும், கிராமப்பகுதிகளில் 8 முதல் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. சிறுதொழில், மீன்பதப்படுத்தும் மற்றும் ஐஸ்கட்டி கம்பெனிகள் உட்பட அனைத்து தொழில்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை: மாவட்டத்தில், தினமும் 5 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. சிங்கம்புணரி பகுதியில், கயிறு, எண்ணெய் உற்பத்தி, பிளாஸ்டிக் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி, புதுவயல் அரிசி ஆலைகளில், மின்வெட்டால், அரிசி உற்பத்தி குறைந்து விட்டன. "பேப்பர் கப்' பாக்கு மட்டை தட்டு, பேவர் பிளாக் கல் தயாரிப்பு போன்ற தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயமும் அடியோடு படுத்து விட்டது.
விருதுநகர்: நகர்ப்பகுதிகளில், ஆறு மணி நேரம், கிராமப்பகுதிகளில் எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. விருதுநகரில் எண்ணெய் மில்கள், சிவகாசியில் அச்சுத்தொழில், சாத்தூரில் தீப்பெட்டி தொழில், ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் விசைத்தறி, தளவாய்புரத்தில் ஆடை தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.