நவம்பர் 7 வரலாறு

நிகழ்வுகள்
1492 - உலகின் மிகப் பழமையான
விண்கல் மோதல் பிரான்சில்
இடம்பெற்றது.
1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ்

கரையை அடைந்தார்.
1665 - உலகின் பழமையானதும்
இப்போதும் வெளிவரும் த லண்டன்
கெசட் ( The London Gazette )
முதலாவது இதழ் வெளியானது.
1893 - கொலராடோ மாநிலத்தில்
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1910 - உலகின் முதலாவது விமானத்
தபால் சேவை ரைட்
சகோதரர்களால் ஒகையோவில்
ஆரம்பிக்கப்பட்டது.
1917 - அக்டோபர் புரட்சி:
விளாடிமிர் லெனின் தலைமையில்
கம்யூனிசப் புரட்சியாளர்கள்
ரஷ்யாவின் இடைக்கால
அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய
ஜூலியன் நாட்காட்டியில் இது
அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
1917 - முதலாம் உலகப் போர்:
பிரிட்டிஷ் படைகள் ஓட்டோமான்
பேரரசிடம் இருந்து காசாப்
பகுதியைக் கைப்பற்றின.
1918 - மேற்கு சமோவாவில் பரவிய
ஒரு வித நச்சு (வைரஸ்) நோய்
காரணமாக 7,542 பேர் (20% மக்கள்
தொகை) ஆண்டு முடிவிற்குள்
இறந்தனர்.
1931 - மா சே துங் சீன சோவியத்
குடியரசை அக்டோபர் புரட்சியின்
நினைவு நாளில் அறிவித்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
"ஆர்மேனியா" என்ற சோவியத்
மருத்துவக் கப்பல் ஜேர்மனிய
விமானங்களின் குண்டுவீச்சில்
மூழ்கியது. 5,000 பேர் வரையில்
இதில் கொல்லப்பட்டனர்.
1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில்
நெமிடீவ் என்ற இடத்தில் 2580
யூதர்களைக் கொன்றனர்.
1956 - சூயஸ் கால்வாய் பிரச்சினை:
எகிப்தில் இருந்து உடனடியாக
ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ்,
இஸ்ரேல்
படைகளை வெளியேறுமாறு ஐநா
பொதுச் சபைக் கூட்டத்தில்
கேட்கப்பட்டது.
1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட்
கட்டடத்தில் குண்டு வெடித்தது.
1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி.
நுண்மத்தை பெற்றுள்ளதாக
அறிவித்து என். பி. ஏ. -இல்
இருந்து வெளியேறினார்.
1996 - நைஜீரிய விமானம் ஒன்று
லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர்
கொல்லப்பட்டனர்.
2002 - அமெரிக்கப் பொருட்களின்
விளம்பரங்களை அறிவிக்க ஈரான்
தடை செய்தது.

பிறப்புக்கள்
1867 - மேரி க்யூரி போலந்து
மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர்,
நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)
1879 - லியோன் ட்ரொட்ஸ்கி , ரஷ்யப்
புரட்சியாளர், (இ. 1940 ).
1888 - சி. வி. இராமன் , இந்திய
இயற்பியலாளர் , நோபல் பரிசு
பெற்றவர், (இ. 1970 ).
1913 - அல்பேர்ட் காம்யு - நோபல்
பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், (இ.
1960 ).
1954 - கமல்ஹாசன் , தமிழ் நடிகர்.
1969 - நந்திதா தாஸ் , இந்திய நடிகை.
1980 - கார்த்திக் -பாடகர், தமிழ்ப்
பின்னனிப் பாடகர்.

இறப்புகள்
1862 - பகதுர்ஷா ஜஃபர், பேரரசர்,
விடுதலைப் போராட்ட வீரர்
1947 - கோ. நடேசையர் , இலங்கையின்
மலையகப் பத்திரிகையாளர்
1951 - என். சி. வசந்தகோகிலம்,
கருநாடக இசைக் கலைஞர்.
1993 - திருமுருக கிருபானந்த
வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906 ).
2000 - சி. சுப்பிரமணியம் , இந்திய
அரசியல்வாதி, (பி. 1910).

சிறப்பு நாள்
பெலருஸ் - அக்டோபர் புரட்சி நாள்
( 1917 )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...